#BREAKING | லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் சோதனை செய்ய கோரி வழக்கு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யபட்ட மனுவில் "வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும், லோகேஷ் கனகராஜ்  இயக்கும் படங்களில் சட்டவிரோத செயல்கள், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் மூலம் இளைஞ்சர்களை தவறாக வழி நடத்தும் விதமாக அமைத்துள்ளது. வன்முறை அதிகம் உள்ளதால் லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும்.

லோகேஷ் கனகராஜின் எல்லா திரைப்படங்களும் பெண்களைக் கொல்வதை புகழ்ந்துரைப்பதாக உள்ளது. இயக்குனரின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லியோ படம் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதால் தனக்கு ரூ.1000 வழங்க வேண்டும் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு உயநீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாதால் விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case filed for Lokesh Kanagarj psychological test


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->