பாம்பே ஜெயஶ்ரீ எப்படி இருக்கிறார்? உடல்நலம் குறித்து வெளியிட்ட புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராகவும் இருந்து வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் கர்நாடக இசை மட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், இளையராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் நிறைய படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார். 

கர்நாடக இசை உலகில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் சென்னை மியூசிக் அகாடமி வழங்குகின்ற சங்கீத கலாநிதி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீ திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்தவாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதில், அவருடைய மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.  தற்போது அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்த தகவலை அவரது குடும்பத்தினர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து ட்விட்டரில் "மருத்துவ சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஜெயஸ்ரீ உடல்நலம் நன்கு குணமடைந்து வருகிறார். NHS ஊழியர்கள் சிறப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்திய அரசும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bombay jayasri day by day cure family members announce


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->