'வாரிசு' பட வசூலை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார் இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இதனையடுத்து வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், வாரிசு திரைப்படம் சீரியல் போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் வாரிசு திரைப்படத்தின் வசூலை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் '300 கோடி. உலக மகா உருட்டு' என தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue sattai maran trolled Varisu movie collection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->