பிக் பாஸ் சீசன் 7 | சைலன்ட் கில்லர் ஜோவிகா விஜயகுமார்! எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
big boss 7
விஜய் தொலைக்காட்சியில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
1 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிவுள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களை, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் போட்டியாளராக நடிகரும், யூடியூப் பிரபலமான கூல் சுரேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் நடந்த 'சரக்கு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு கூல் சுரேஷ்மாலை அணிவித்து சர்சையில் சிக்கி இருந்தார்.
இரண்டாவதாக யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி : அராத்தி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக சின்னத் திரை நடிகை ரவீனா தாஹா: தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரவீனா தாஹா குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.
பிரதீப் ஆண்டனி :
வாழ் திரைப்படத்தின் நாயகன் பிரதீப் ஆண்டனி நான்காவதாக அறிமுகப்படுத்தப்பட்டார். பிரதீப் ஆண்டனி டாடா படத்தில் கவினின் நெருங்கிய நண்பராக நடித்திருப்பார்.
ராப் பாடகர் நிக்ஸன்
வினுஷா தேவி :
மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து முத்திரைப் பதித்த வினுஷா தேவி, பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மணிசந்திரா :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் மணிசந்திரா.
அக்ஷயா உதயகுமார் :
அண்மையில் வெளியான லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக வந்து கவனம் பெற்றவர் அக்ஷயா உதயகுமார்.
ஜோவிகா விஜயகுமார் :
இந்த பிக் பாஸ் சீசனில் பலருந் கவனத்தையும் ஈர்த்துள்ளவர் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தான். அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
ஐஸூ :
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் ஐஸூ.
விஷ்ணுவிஜய் :
சின்னத்திரை நடிகரான விஷ்ணுவிஜய் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடர் மூலம் பிரபலமானவர்.
மாயா எஸ்.கிருஷ்ணா :
மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாயா எஸ்.கிருஷ்ணா, விரையில் வெளியாகவுள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார்.
சரவணா விக்ரம் :
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக நடித்திருப்பவர் சரவணா விக்ரம்.
யுகேந்திரன் வாசுதேவன் : மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.
விசித்ரா :
பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாகவும், பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார் விசித்ரா.
பவா செல்லத்துரை :
ஜோக்கர், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பவா செல்லத்துரை, எழுத்தாளராகவும் இருந்து வருகிறார்.
அனன்யா:
மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.
இறுதியாக நடனக் கலைஞர் விஜய் வர்மா அறிமுகம் செய்யப்பட்டார். இந்த முறை 2 பிக் பாஸ் வீடுகள் உள்ளதாக கமல் அறிவித்துள்ளதால், இந்த பிக் பாஸ் -7 மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.