பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜிம் பயிற்சியாளர் மீது வங்காள மொழி நடிகை பரபரப்பு புகார்.!   - Seithipunal
Seithipunal


வங்காள மொழி நடிகையாக வலம் வருபவர் பாயல் சர்க்கார். இவர் பல இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருவதுடன் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில், இவர் கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் காவல் நிலையத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "எனது மொபைலுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்து கொண்டிருந்தன. 

அதன் படி, நான் அந்த எண்ணை ஆராய்ந்து பார்த்தபோது அது ஒரு ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே இன்னொரு எண்ணில் இருந்து ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பினார். 

அத்துடன், அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bengal actress Payal Sarkar complaint on jim coach


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal