மார்க்கெட் அவுட்... ரூட்டை மாற்றிய நயன் விக்கி.! பக்காவான மாஸ்டர் பிளான்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நயன்தாரா. இவர் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா மார்க்கெட் தமிழில் டல் அடிக்க தொடங்கி விட்டது.

தற்போது இவர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்ல நடித்து வருகிறார். இதனைத் தவிர வேறு எந்த படங்களும் இவரது கைவசம் இல்லை விக்னேஷ் சிவனுக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு பறிபோனதால் என்ன செய்வது.? என்று தெரியாமல் தவித்து வருவதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குஜராத்தி மொழியில் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தை தேசிய விருது பெற்ற குஜராத் இயக்குனர் மனிஷ் சைனி என்பவர் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கான வரவேற்பு பொறுத்து தொடர்ந்து குஜராத்தி மொழியில் படம் இயக்குவதா என்பதை பற்றி முடிவு செய்ய இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

because of low market nayan and vicky moves to gujarathi cinema


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->