எல்லாமே இங்கு ரெண்டு தான்! பிக்பாஸ் : கதிகலங்கும் போட்டியாளர்கள்! முதல் வாரமே ரணகளம் - Seithipunal
Seithipunal


 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக். 1 முதல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கிவுள்ளது. 

நிகழ்ச்சியின் முதல் நாளில் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் பல்வேறு புதிய விதிமுறைகள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

முந்தைய சீசன்களில் முதல் வாரம் முழுவதும் பாசம், அன்பு, நட்பு என போட்டியாளர்கள் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் விளையாடுவார்கள். 

ஆனால், இந்த சீசனில் முதல் நாளே கேப்டன் டாஸ்க் வழங்கி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளார் பைக் பாஸ்.

முதல் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நடனக் கலைஞர் விஜய் வர்மா இந்த வார கேப்டனாகியுள்ளார்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த சீசனில் முதல் முறையாக 2 பிக்பாஸ் வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த இரண்டாவது வீட்டுக்கு 'ஸ்மால் பாஸ்' வீடு என்றும், கேப்டனை கவராத 6 போட்டியாளர்கள் இந்த ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டும் உள்ளனர்.

பவா செல்லதுரை, ரவீனா தாஹா, வினுஷா தேவி, ஐஷு, அனன்யா, நிக்ஸன் ஆகியோர் இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் தள்ளப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டின் பணிகள் மற்றும் அங்கு உள்ளவர்களுக்கு இவர்கள் 6 பேர் தான் சமைத்து கொடுக்க வேண்டும். 

மேலும் ஒரு சுவாரசியமாக, பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரு குரலாக ஒலிப்பதும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

என்னப்பா எல்லாமே இரண்டு இரண்டா இருக்கே, நாமினேஷனும் இரண்டா என்று கேட்டால், ஆம் இரண்டு நாமினேஷன் தான். 

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமே நாமினேஷன் செய்யும்படி புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சுவாரஸ்யமான விதிமுறைகள் போட்டியாளர்களை போட்டு தாக்கினாலும், ரசிகர்களுக்கு கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்பதுபோல ஒரே கொண்டாட்டமாக அமைந்துள்ளது இந்த சீசன்.

மேலும், வார இறுதியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் என்னயென்ன புதிய விதிமுறைகள் கொண்டுவருவார் எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BB7 Tamil New Rules


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->