அந்த பொண்ணா இது !? பாரதி கண்ணம்மாவின் குழந்தை குறித்த சுவாரஸ்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முக்கியமானது என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த தொடர் பல இல்லத்தரசிகளுக்கும் பிடித்தமானதாக அமைந்தது. 

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக அவர் நிறைய ரசிகர்களை பெற்றார். இவரது கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு மட்டும் நிறைய ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சீரியலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார். இதில் ஒரு குழந்தை அவருடனும், மற்றொரு குழந்தை அவருக்கே தெரியாமலும் வளர்ந்து வருகிறது. சீரியல் விரைவில் முடிவடைய போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

தற்போது கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை சௌந்தரிய லட்சுமி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்த விதமாக அமைந்துள்ளது. இந்த பெண்ணின் சுட்டித்தனமான நடிப்பு அனைவரையும் கவர்கிற.து இந்த சிறுமிபிரபல சீரியல் நடிகர் ஷ்யாமின் இளைய மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இதற்கு முன்பாக இந்த குழந்தை ரெமோ படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவரின் முதல் மகளும் முன்னதாக சீரியலில் நடித்து இருக்கிறார். தற்போது, செந்தூரப்பூவே தொடரில் நடித்து வருகின்றார். இவர்களின் குடும்பமே சீரியல்களில் நடித்து வருவது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

barathi kannama baby information


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal