பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் இவர் அந்த நடிகரின் மகனா.?! நிஜத்திலும் தங்கமானவரா இருக்காரே.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா ரசிகர்களால் ஜேம்ஸ்  பாண்டு என அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். இவரது மகனான விஜய் சங்கர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சின்னத்திரை  தொடரில் முதல் முறையாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடருக்கென்று சின்னத்திரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. டிஆர்பி வரிசையிலும் முன்னணி வகித்து வரும் தொடர் இது. இந்தத் தொடரின் நாயகியான பாக்யா தன்னுடைய சுய கௌரவத்தையும், தன்மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள தனி ஆளாக போராடுகிறார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பாக்கியாவிற்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சங்கர். இந்தத் தொடரில் இவரது ராஜசேகர் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தந்தை பற்றியும்  தான் செய்து வரும் உதவிகள் பற்றியும் மனம் திறந்து இருக்கிறார் விஜய் சங்கர்.

இந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர்  தான் படித்துக் கொண்டிருக்கும் காலங்களிலேயே சினிமாவிற்கு வர வேண்டுமென்று தந்தையிடம் தெரிவித்ததாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தை படிப்பை முடித்துவிட்டு தான் மற்றதை பார்க்க வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான இவர் தனது தந்தையின் நினைவாக கண் அறுவை சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைகளை ஏழை மக்களுக்கு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது  தந்தையின் நினைவாக ஒரு முகாமை உருவாக்கி அதை விரிவுபடுத்த  முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார் இவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bakyalakshmi fame vijay shakar talks about his social works


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->