44 வயதில் மிரட்டுலாக தீவிர உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தைகளின் படிப்புக்காக குடும்பத்துடன் அவர்கள் மும்பைக்கு குடி பெயர்ந்தனர். 

இந்நிலையில், நடிகை ஜோதிகா தான் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 44 வயதில் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதோடு, மிக கடினமான உடற்பயிற்சிகளை மிக சுலபமாக அவர் செய்வதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, நடிகர் மாதவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கமெண்டில் பாராட்டியுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

At the age of 44 Jyotika is doing vigorous exercise Viral video


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->