பிரபல நடிகை கொரோனாவால் பலி! அதிர்ச்சியில் திரை உலகம்!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மராத்தி திரைப்பட நடிகை அஷலதா வப்கோங்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா நோய்த்தொற்றுக்கு அரசியல் பிரபலங்கள், எம்எல்ஏ.,க்கள், எம்பி.,க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை, வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் பிரபல திரைப்பட நடிகை அஷலதா வப்கோங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஷலதா வப்கோங்கர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து, நடிகை அஷலதா வப்கோங்கர் கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகை அஷலதா வப்கோங்கர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 100க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மும்பை திரை உலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashalatha kongara dead


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal