'சூரஜுக்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை; பாஸ் செக் செய்தே காவல் துறையினர்தான்; அவர்கள்தான் அனுமதித்திருக்கிறார்கள்'; தவெக அருண்ராஜ் பரபரப்பு..!
Arunraj creates a stir by saying we did not give permission to Suraj
நேற்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில தொழிலாளி ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உயிரிழந்த சூரஜுக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை என்றும், அதையும் மீறி அந்த இளைஞர் எப்படி உள்ளே வந்தார் என்றும் தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து, குமாரபாளையத்தில் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
பல பேர் கூட்டத்திற்கு வர வேண்டும், தலைவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டாலும் இந்த இளைஞருக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை என்றும், 06 மாதத்துக்கு முன்பே சூரஜுக்கு ஆஞ்சியோ செய்து ஸ்டண்ட் வைத்துள்ளனர் என்பதை தெரிந்து தவெக நிர்வாகிகள் அவருக்குப் பாஸ் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அதையும் மீறி காவல் துறையினரே அவரை அனுமதித்துள்ளனர். ஒவ்வொருவராக பாஸ் செக் செய்தே காவல் துறையினர் அனுமதித்திருக்கிறார்கள். அதையும் மீறி அந்த இளைஞரை ஏன் உள்ளே அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், சூரஜுக்கு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே நெஞ்சுவலி, படபடப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, முதலுதவியாக மெடிக்கல் கேம்புக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக நாங்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்றும், இருந்தாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் கூட்டத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பாஸ் கேட்டும் கொடுக்கவில்லை. ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டது பெரிய தவறுதான். அவருக்கான நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்டச் செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று கூறியிட்டுள்ளார்.
அத்துடன், சேலம் கூட்டத்தில் போதிய வசதிகள் இருந்தது. முதலுதவி கட்சியின் மருத்துவக் குழு மூலமே அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேண்டாம் என்று கூறியும் அவர் வந்துள்ளார் என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியுள்ளார்.
English Summary
Arunraj creates a stir by saying we did not give permission to Suraj