தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய்! அடுத்த ஆண்டு முதற்கட்டப் பணிகள் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார்.இப்படத்தில் அருண் விஜய் நடிப்பதற்கான சம்பளம் பெரும் தொகையாக பேசப்பட்டுள்ளது

நடிகர் தனுஷ் தானே படத்தை இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பட வெற்றியை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குநராக இருந்த தனுஷ் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து 2 காசோலைகளை அன்பளிப்பாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

தற்போது நடிகர் தனுஷ் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநராக பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் இறுதிகட்டப் வேலைகளையும் கவனித்துக்கொண்டு  வருகிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, மீண்டும் மற்றொரு படம் ஒன்றை இயக்கவுள்ளார் நடிகர் தனுஷ்.

இயக்குனர் தனுஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் தனுஷ் படத்தில் நடிப்பதற்கு நடிகர் அருண் விஜய்க்கு சம்பளமாக பெரும் தொகை பேசப்பட்டுள்ளது. அடுத்த 2025 ஆம் ஆண்டு முதல் தொடக்கத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்புசெல்வதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவில் இயக்குனர் தனுஷ் தொடங்கவுள்ளார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Vijay to act in Dhanushs direction Preliminary work to begin next year


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->