இயக்குநர் மனோபாலா மறைவு | அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்! ! - Seithipunal
Seithipunal


இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் மனோபாலா மறைவுக்கு  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த இரங்கல் செய்தியில், தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.  

உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர  பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர்.  மனோபாலா அவர்களின்  மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத  பேரிழப்பாகும்.

மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும்  ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbumani Ramadoss Mourning to manobala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->