"கோழி இன்னும் முட்டை போடல" அவமானப்பட்ட இடத்தில்  தனது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.! - Seithipunal
Seithipunal


சினிமாவில் வளர்ந்து வரும் காலகட்டங்களில் நிறையவும் அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும் அவற்றையெல்லாம்  கடந்து வெறியோடு உழைத்தால்தான் நமக்கான இடத்தை நாம் அடைய முடியும். அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் ரஜினிகாந்த்.

இன்று புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில் நடந்த ஒரு அவமான சம்பவத்தை தான் இப்போது பார்க்க போகிறோம். அப்போது துணை நடிகராக இருந்த ரஜினிகாந்தின் பட ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மதிய உணவு சாப்பிடும் போது ரஜினி, "இன்னொரு ஆம்லெட் கிடைக்குமா"? என  ப்ரொடக்ஷன் பாயிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் "கோழி இன்னும் முட்டை போடல" என கடுப்புடன் பதில் அளித்திருக்கிறார். இதனைக் கேட்ட ரஜினி அவமானத்துடன் வேகமாக எழுந்து சென்று விட்டாராம். அடுத்த ஐந்து வருடங்களில் தனது கடினமான உழைப்பின்  மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

ரஜினியின் ஒரு புதிய படத்திற்கான சூட்டிங் அதே ஏவிஎம் தளத்தில் நடைபெற்றிருக்கிறது. அதே ப்ரொடக்ஷன் பாய் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஒருவித தயக்கத்துடனே ரஜினியை நெருங்கி இருக்கிறார். அப்போது சூப்பர் ஸ்டார் அந்த ப்ரொடக்ஷன் பாயிடம்  "என்னப்பா இப்போ கோழி முட்டை போட்டுருச்சா? என கேட்டிருக்கிறார் ரஜினி. 

இதனைக் கேட்டு பதறிய அந்த ப்ரொடக்ஷன் பாய் ரஜினியின் கைகளை பிடித்து இருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் அந்த நபரிடம் "தம்பி என்னோட நிலைமை அன்று  அப்படி இருந்தது. இன்று என்னுடைய கடினமான உழைப்பின் மூலம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். நீ என்னிடம் அப்படி கூறியது எனக்கு அவமானமாக இருந்தது. அதனால் தான் வெறியோடு எழுந்து சென்றேன். அவமானத்தையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன்" என கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an intresting incdent happend at the early stages of superstar acting career


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->