"அடடே.!" விஜயகாந்துக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இப்படி ஒரு தொடர்பா.?! - Seithipunal
Seithipunal


சினிமாவில் இயக்குனராக வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்காக நிறைய காலங்களும் உழைப்பும் தேவைப்படும். பிரபலமான இயக்குனர்களிடம் பல வருடங்கள்  உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களே சினிமாவில் ஜெயிக்க தவறிய காலகட்டத்தில்  யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களை கொடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். தற்போது தளபதி விஜய் நடிக்கும் லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கும் புரட்சி கலைஞர் விஜயகாந்த்க்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், லோகேஷ் கனகராஜன்  மாமனார் சௌந்தர் மூலமாகத்தான்  அந்தத் தொடர்பு இருக்கிறது. ராவுத்தர் ப்ரொடக்ஷனில் சௌந்தர் பணியாற்றி வந்திருக்கிறார். விஜயகாந்துக்கு வரும் கதைகளை அவர்தான் கேட்டு ஓகே செய்வாராம். சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில்  மனோபாலாவுடன் இணைந்து  திரைப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகியிருக்கிறார் சௌந்தர்.

சௌந்தர் தனது மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தபோது வங்கிப் பணியாளரான லோகேஷ் கனகராஜ்  தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். வங்கிப் பணியை  ராஜினாமா செய்துவிட்டு களம் என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஸ் கனகராஜ்  இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவ்வாறான ஒரு தொடர்பு விஜயகாந்த்திற்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

an indirect link between lokesh kanagaraj and captain vijaykanth may surprise you


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->