ஒரு சிகரெட்டால் நடிகர் வினு சக்கரவர்த்தி வாழ்க்கையில் இவ்வளவு ட்விஸ்ட்டா.?! சுவாரஸ்ய வரலாறு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக காவல்துறையில் 
 பணியாற்றி இருக்கிறார். அப்போது ரயில்வே போலீசிலும் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

ரயில்வே போலீசாக பணியாற்றும்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கிறது. மைசூருக்கு பணியிட மாற்றலில் சென்ற வினு சக்கரவர்த்தி ரயிலில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருடன் பயணித்த சகப் பயணி விலை உயர்ந்த சிகரெட் புகைத்திருக்கிறார். 

அவர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட் இயக்குனர் ஸ்ரீதர் புகைக்கும் சிகரெட் என்பதால் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி. இதைக் கண்ட அந்த நபரும் இவருடன் பேச்சு கொடுக்க தொடங்கி இருக்கிறார். அப்போதுதான் வினு சக்கரவர்த்திக்கு தெரிந்திருக்கிறது இவர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ண கனகல் என்று.

அவரிடம் தனது சினிமா ஆசைகளைப் பற்றியும் கூறி இருக்கிறார் வினு சக்கரவர்த்தி. இதை கேட்ட இயக்குனர் புட்டண்ண கனகல் தன்னுடன் உதவி இயக்குனராக இணைந்து பணியாற்ற அழைத்திருக்கிறார். உடனே வினு சக்கரவர்த்தியும் அவருடன் உதவி இயக்குனராக பணியாற்ற சென்று விட்டார்.

அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினு சக்கரவர்த்தி  வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதை ஆசிரியராக அறிமுகம் ஆனார். மேலும், ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இயக்குனர் பாரதிராஜாவும் புட்டண்ண கனகலிடம்தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an incident happened in the life of ace actor vinu chakravarthy which turned his career towards cinema


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->