அந்த விஷயத்தில்.. தளபதியை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! வாய்பிளக்கும் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கின்ற அல்லு அர்ஜூன். இவருடைய நடிப்பினில் கடந்த 2021 ஆம் வருடத்தில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படத்தில் சுகுமார் இயக்கத்தினில் தற்பொழுது நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வருகின்றார்.

இதன் முதல் பாகமானது ரூ.350 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், புஷ்பா 2 திரைப்படமும் அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் வரும் சங்கராந்தி பண்டிகையின் போது வெளியாக இருக்கின்றது. 

இந்நிலையில், அடுத்ததாக அல்லு அர்ஜுன் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கின்ற நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதனை கொண்டாடிய தீர்த்து வருகின்றனர். 

இத்தகைய நிலையில், தென்னிந்திய நடிகற்களில் முன்னணி நடிகராக பார்க்கப்படும் விஜயை விட இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுவரை நடிகர் விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகின்றார். அவரது படத்திற்கு 100 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் அல்லு அர்ஜுன் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்திற்கு 125 கோடி சம்பளமாக நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Allu Arjun beat Actor Vijay In salary 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->