சூப்பர் மாஸ் அப்டேட்... ஏகே 62 திரைப்படத்தின் தலைப்பு இதுதானா.! வெளியான புதிய தகவல்.! - Seithipunal
Seithipunal



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் 62 வது திரைப்படத்தின்  அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை நயன்தாராவின் கணவரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்திற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி இத்திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த படத்தை பற்றிய புதிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்று பெயர் வைத்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபகாலமாகவே அஜித்தின் திரைப்படங்களுக்கான பெயர்கள் வி என்ற எழுத்தில் தொடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AK 62 movie title is the latest news


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->