ஐஸ்வர்யா ராய்க்கும் மகள் ஆரத்ராவிற்கும் கொரோனா உறுதியானது! இரண்டாவது சோதனையிலும் தப்பித்த ஜெயாபச்சன்!  - Seithipunal
Seithipunal


நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்ரா பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று இரவு தனக்கும் தனது தந்தையான அமிதாப் பச்சனுக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடிகர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேசமயம் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில், ஐஸ்வர்யா ராய் பச்சன் அவருடைய மகள் ஆரத்ரா பச்சன் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று  இல்லை என முடிவு வெளியானது. 

இந்த நிலையில் இரண்டாவதாக நடத்தப்பட்ட சோதனைகள் தற்போது ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆரத்ரா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஜெயா பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று  இல்லை என முடிவு வந்துள்ளது. 

ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமும் அமிதாப் பச்சனின் குடும்பத்தினரை தொடர்ந்து நலம் விசாரித்து கொண்டிருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aishwarya Rai Bachchan covid19 tested positive


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->