நடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா? அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!
actrss yashika like to marry young hero
தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் மிகவு ஆபாசமாக நடித்ததன் மூலமாக பெருமளவில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

மேலும் எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் நடிகை யாஷிகா, தற்பொழுது பேட்டி ஒன்றில் தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அப்பொழுது நீங்கள் யாரையும் காதலிக்கிறீர்களா உங்களுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள ஆசை? என கேள்வி எழுப்பிய நிலையில், அவர் நான் இன்னும் சிங்கிள் தான், எனக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என கூறியுள்ளார்.
மேலும் எனக்கு சின்ன வயதிலேயே நடிகர் சூர்யாவை திருமணம் செய்ய ஆசை. ஆனால் தற்போது அவர் மீது நல்ல மரியாதை உள்ளது என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து நடிகை யாஷிகா தனது பாய்பிரண்டுடன் திருமணம் முடித்த பிறகு ஸ்விட்சர்லாந்து செல்லவேண்டும் என எனக்கு ஆசை உள்ளது எனவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
English Summary
actrss yashika like to marry young hero