காதல் மன்னன் அஜித்தின் மேல் காதலில் விழுந்த நடிகைகள்!
Actresses who were in love with Ajith
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உடன் வருபவர் தல அஜித்குமார். தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் அறிமுகமான புதிதில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவே வளம் வந்தார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். காதல் கோட்டை, காதல் மன்னன், வான்மதி போன்ற திரைப்படங்கள் இவருக்கு காதல் மன்னன் என்ற அடைமொழியை வாங்கி கொடுத்தது.

தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமிக்கு பிறகு ஒரு அழகான ஹீரோ என்றால் அஜித் தான். இதை யாராலும் மறுக்க முடியாது. திருமணத்திற்கு முன்பு ஒரு நடிகையுடன் அஜித்திற்கு காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அது உண்மை தான் என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அஜித்துடன் காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் ஹீரா. ஹீராவும் அஜித்தும் காதலித்து வந்ததாகவும் இருவரும் ஈசிஆரில் தனி பங்களா எடுத்து வசித்து வந்ததாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இது தொடர்பாக அஜித்திடம் கேட்டபோது என் சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என கோபமாக கத்தி விட்டாராம். அதிலிருந்து யாரும் அந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்பதில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படப்பிடிப்பின் போது அஜித் மிகவும் கம்பீரமாக அழகாக இருந்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தபு அஜித் அவர் எதிரே உட்கார்ந்து இருக்கும் போது அவரை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்துக் கொண்டிருப்பாராம். ஆணழகன் கண் முன் உட்கார்ந்திருக்கும் போது யாரால்தான் சைட் அடிக்காமலிருக்க முடியும்.
English Summary
Actresses who were in love with Ajith