தளபதி விஜயுடன் பிரபல சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம் தீயாக பரவல்.!
Actress shabana is With Vijay
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி சீரியலின் மூலமாக பிரபலமடைந்தவர் தான் சின்னத்திரை நடிகையான ஷபானா. கடந்த வருடம் இவர் சின்னத்திரை நடிகர் ஆரியனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் திருமணத்தால் இருவரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் விஜயின் வாரிசு படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை ஷபானாவும் கலந்து கொண்டார்.
உலகம் முழுவதும் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களை போல ஷபானாவும் ஒரு விஜய் ரசிகை தான். பலமுறை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் இதை தெரிவித்து இருக்கிறார்.

இத்தகைய நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஷபானா தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
English Summary
Actress shabana is With Vijay