'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்' அடுத்தடுத்த அதிர்ச்சி தகவலை தெரிவித்த நடிகை லட்சுமி மேனன்...! - Seithipunal
Seithipunal


கேரளா எர்ணாகுளத்தில் திருப்போனித்துரா சுத்துவட்டாரத்தை சேர்ந்த பிரபல நடிகை 'லட்சுமி மேனன்'. இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ் படங்களான கும்கி, சுந்தரபாண்டியன், ரெக்க உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். இதனிடையே,கடந்த 24-ந்தேதி இரவு கொச்சி பானர்ஜி சாலையில் இருக்கும் மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் லட்சுமி மேனன் சென்றிருக்கிறார்.

அப்போது ஐ.டி. ஊழியர் 'அலியார் ஷா சலீம்' என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் நடுவே தகராறு ஏற்பட்டது.இவர்களுக்குள் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் அந்த மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பாரை விட்டு வெளியே வந்தபிறகும் அவர்களுக்கும் தகராறு தொடர்ந்து நடந்தது.

அதன்பிறகு ஐ.டி. ஊழியர் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றிருக்கிறார்.அதன்பிறகும் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று வழி மறித்து நடுரோட்டில் தகராறு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகாரளித்தார். அவர் அந்த புகாரில் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவலர்கள் விசாரணை நடத்தினர்.அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகையின் நண்பர்கள், ஐ.டி.ஊழியரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து நடிகையின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து நடிகை கூறுகையில் தங்களின் மீது புகார் கொடுத்துள்ள நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். மேலும் முன் ஜாமின் மனுவில் தெரிவித்திருப்பதாவது,"புகார்தாரர் என்னை ஒரு பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

நான் பாரை விட்டு வெளியேறிய பிறகும், அந்த நபர் காரில் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் அந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.இதில் அவரது மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Lakshmi Menon reveals shocking news she was harassed by it employee


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->