தொடர் வெற்றி - காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்.!
actor yogi babu swami dharisanam in kasi viswanathar temple
தொடர் வெற்றி - காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்.!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மான்கராத்தே, மெர்சல், பிகில், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் நிலையில் யோகி பாபு அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்தார்.

அப்போது, அவர் தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு காசி விஸ்வநாதர், உலகம்மனை தரிசனம் செய்த அவர் அடுத்ததாக முருகப் பெருமானை தரிசனம் செய்தார்.
அந்த நேரத்தில், அங்கு வந்திருந்த பொதுமக்கள் அவரை சூழ்ந்துள்ளனர். அவர்களிடம் நடிகர் யோகி பாபு உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
English Summary
actor yogi babu swami dharisanam in kasi viswanathar temple