ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்.! வைரலாகும் ட்விட்டர் போஸ்ட்.!
actor vijay wishes to sharukhan
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பாலிவுட்டில் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகியுள்ள அட்லி தனது முதல் படத்திலேயே ஆயிரம் கோடி வசூலைப் பெற்றிருப்பதற்கு அனைவரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக அட்லி- ஷாருக்கான் கூட்டணி உருவாக முக்கிய காரணமே நடிகர் விஜய்தான் என்று அட்லி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் ’ஜவான்’ படத்தின் ஆயிரம் கோடிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதற்கு, ‘உங்களது வாழ்த்துக்கு நன்றி. விஜய் சாரின் அடுத்தப் படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய் சார்!’ என்று ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் விஜய், ‘ஷாருக்கான், அட்லி மற்றும் ‘ஜவான்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள். லவ் யூ டூ ஷாருக் சார்’ என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
actor vijay wishes to sharukhan