நடிகர் விஜய் இதெல்லாம் கொண்டாடுகிறாரா?! ஆச்சர்யமாக பார்க்கும் ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


இன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக அளவில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத இந்த தினங்கள், சமூக ஊடக வாசிகளுக்கு கண்டெண்ட் எதுவும் இல்லாத காரணத்தினால் கொண்டாட ஆரம்பிக்க, இன்று நண்பர்கள் தின வாழ்த்து பதிவுகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறது. 

கொண்டாடத்தின் அடுத்த கட்டமாக, இந்த நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும், வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாகிவிட்டது. 

ஆனால் இந்த வருடம் அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத வகையில், தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரடங்கு காரணமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக  சமூக ஊடகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தது வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் விஜய் சிறுவயது முதலே நட்பு வட்டாரத்தில் வைத்திருக்கும் சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் இன்று வீடியோ அழைப்பு மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார். அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக நண்பர் தின வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளார். அதனை போட்டோவாக வெளியாக, அதனை அவரது ரசிகர்கள் நட்புக்கு இவ்வுளவு முக்கியத்துவம் கொடுத்து, நண்பர்கள் தினமெல்லாம் கொண்டாடுகிறாரே என ஆச்சர்யமாக பகிர்ந்து வருகிறாரகள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vijay Celebrated Friendship day with his friends in video call


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal