சாய் பல்லவியின் எளிமைக்கு ஷாக் ஆன actor ...! IFFI-யில் எடுக்கப்பட்ட ஒரே செல்பி இணையத்தில் வைரல்.. - Seithipunal
Seithipunal


கோவாவில் நடைபெற்று வரும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI 2025) இந்த ஆண்டும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியுள்ளது. ரெட் கார்பெட்டில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கிடையில், சமூக வலைதளங்களை தீப்பரவலாக்கிய ஒன்று, அனுபம் கெர் & சாய் பல்லவி செல்பி.

தேசிய விருது பெற்ற திறமையான நடிகர் அனுபம் கெர், விழா மேடையில் சந்தித்த சாய் பல்லவியுடன் எடுத்த செல்பியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும், அது நொடிகளில் வைரலானது. அதோடு, சாய் பல்லவியைப் பற்றிய மனமார்ந்த குறிப்பையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அனுபம் கெரின் வார்த்தைகளில்,"IFFI விழாவில் சாய் பல்லவியைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் உண்மையானவர், பாசமுள்ளவர், மரியாதைக்குரியவர். அபாரமான திறமைவாய்ந்த நடிகை. அவர் செய்யும் அனைத்து படங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜெய் ஹோ!”.

சாய் பல்லவி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிறைந்த ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மறுபுறம் அனுபம் கெர், பிரபாஸ் நடித்துவரும் ‘பவுஜி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor shocked by Sai Pallavi simplicity only selfie taken IFFI viral internet


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->