சினிமா துறையில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம் உள்ளிட பல திரைப்படங்களில் நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் ஆர்.எஸ். சிவாஜி (வயது 66) இன்று இயற்கை எய்தினார். 

கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் ஆர்.எஸ். சிவாஜி சினிமாவில் அறிமுகமானார். 

இவர் நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். இவர் மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தும் 1989 ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. 

இவர் பேசும் 'எங்கையோ போயிட்டீங்க சார்' என்ற நகைச்சுவையான வாசகம் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு பல படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து தவறாமல் நடித்து வந்தார். 

இவர் இயக்குனர் நெல்சனின் 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில் இன்று காலை ஆர்.எஸ். சிவாஜி உடல்நல குறைவு காரணமாக காலமானார். இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

சென்னை உலக சினிமா விழாவில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ். சிவாஜி கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor RS Shivaji died 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->