ரக்ஷனின் மனைவி புகைப்படம்.! இது வதந்தியா.!? வைரல் போட்டோவின் பின்னணி.!
actor rakshan wife photo viral
தொகுப்பாளர் ரக்ஷன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது பிரபலமாகி இருக்கிறார். முன்னதாக அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துணை கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகின்ற ரக்ஷன் பேச்சிலர் இல்லை என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இது எல்லாம் வதந்தி என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இதை வெளியிட்டது ரக்ஷன் தான். தன்னுடைய மனைவி என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரக்ஷன் வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த புகைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாம். அவருடைய மனைவியார் மற்றும் அவருடைய பெயர் போன்ற விவரங்கள் எதுவும் தெரிய வரவில்லை. ஆனால், ரக்ஷனின் ரசிகைகளுக்கு இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary
actor rakshan wife photo viral