இன்று குடிமைப்பாதுகாப்பு ஒத்திகை..அச்சப்பட தேவையில்லை..மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
Civil defence drill today There is no need to be afraid District Collectors Instructions
இன்று மாலை புதுச்சேரி விமான நிலையத்தில் “குடிமைப்பாதுகாப்பு ஒத்திகை” நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்திய மத்திய அமைச்சகத்தின் நேர்வின்படி புதுச்சேரி விமான நிலையத்தில் இன்று மாலை "ஆபரேஷன் அபையாஸ்" என்னும் “குடிமைப்பாதுகாப்பு ஒத்திகையை” நடைபெறவுள்ள இந்த நிலையில் ஒத்திகையினை திறம்பட செய்வது குறித்து, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, சார்-மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, மின் துறை, இந்திய விமானப்படை, தேசிய மாணவர் படை, தேசிய சேவை திட்டம், புதுச்சேரி விமானத்தளம், சுற்றுலாத்துறை, அனைத்து தாலுக்கா வட்டாட்சியர்கள், பேரிடர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆலோசனை நடத்தினார்.
இன்று மாலை 04.00 மணியளவில் இலாசுப்பேட்டையில் உள்ள புதுச்சேரி விமானத்தளம் அருகில் "வான் வழித்தாக்குதலின்" போது துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் செய்ய வேண்டியவை குறித்து ஒத்திகை நடைபெற உள்ளாதல், ஒத்திகை மட்டுமே என்பதால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், ஒத்திகையை திறம்பட நடத்திட தேவையான முழு ஒத்துழைப்பும் அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
English Summary
Civil defence drill today There is no need to be afraid District Collectors Instructions