பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்... 10 இந்தியர்கள் பலி...!
10 Indians killed in Pakistani army attack
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் -பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியா கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.மேலும் இந்திய ராணுவம், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக அழித்துள்ளது.
இந்த ''ஆப்ரேஷன் சிந்தூர்'' மூலமாக பயங்கரவாத முகாம்கள் அழித்த நிலையில், இந்திய வான்வெளி தீவிரமாக இந்திய ராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூஞ்ச், குப்வாரா, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும், இந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்தியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்திய மக்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
10 Indians killed in Pakistani army attack