#Breaking: ஓணானை வேட்டியில் விட்ட தருமபுரி எம்.பி..! சின்னாபின்னமான சோகம்.. வச்சி செய்த பார்த்தீபன்.! - Seithipunal
Seithipunal


திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மருத்துவர் செந்தில்குமார். இவர் தருமபுரி தொகுதியில் வாக்கு சேகரிக்க வருகையில், நான் இன்னாரின் பேரன் என்று ஜாதிய அடையாளத்துடன் வாக்குகளை கேட்டு, அத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் வாக்குகளை பெற்றதாக உள்ளூர் மக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். 

தேர்தலில் வெற்றி பெற்றதும் அற்பனுக்கு வாழ்வு வந்தால், அத்தராத்திரியில் குடைபிடிப்பார் என்பதை போல ஒய்யாரமாக சுற்றி திரிந்து வந்தார். இதன்பின்னர் இவரது ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்பாளர்கள் அதிகரித்த நிலையில், ஐ படத்தில் வரும் பவர்ஸ்டார் காமெடி போல, பின்தொடர்பாளர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்களாக இருந்து வந்தனர். 

இவரை வைத்து பல மீம்கள், இவருக்கென பல புனைப்பெயர்கள் என ஒரு பக்கம் பரபரப்பாக இருக்க, மற்றொரு பக்கம் இவருக்கு ஆதரவளிக்கும் உடன்பிறப்புகள் தங்கள் பங்கிற்கு எதிர்கருத்துக்களையும் பதிவு செய்து வந்தனர். 

இருப்பதிலேயே அதிகளவு கலாய்கள் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை பெருமையாக தெரிவித்து வந்த நிலையில், அரசியல் விஷயங்களில் சில நேரம் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துவிட்டு பின்னர் பின் வாங்குவது வழக்கமான ஒன்றாக இவரிடம் இருக்கிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவித்த நிலையில், சிறந்த திரைப்படமாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்தீபனின் ஒத்த செருப்பு அளவு 7 படம் தேர்வு செய்யப்பட்டது. 

இதற்கான புகைப்படங்கள் தமிழ்நாட்டு வட்டாரங்களில் பெரும் வைரலாகிய நிலையில், சம்பந்தேமே இல்லாமல் திமுக எம்.பி மருத்துவர் செந்தில் குமார் அண்ணனுக்கு பாஜக சீட் பார்சல் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை முதலில் பதிவு செய்துவிட்டு நீக்கியுள்ளார். 

இதனைக்கண்ட நெட்டிசன்கள் கறிவிருந்து தயாராவது போல சந்தோசத்தை வெளிப்படுத்தி, புகைப்படமாக பதிவு செய்து பகிர்ந்து வந்தனர். இந்த பதிவு நடிகர் பார்த்தீபனின் கண்களில் படவே, பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகிய பார்த்தீபன் தனது கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்த ட்விட்டர் மற்றும் முகநூல் பதிவுகள் வைரலாகி வருகிறது. 

மத்திய அரசின் விருது கொடுத்தால் அல்லது பாராட்டினால் பாஜகவில் சேர வேண்டும் என்ற விதி எங்கும் வைக்கப்படுவதில்லை. மாறாக அவர்களின் எண்ணத்தையே இது வெளிப்படுத்துகிறது என்றும் சமூக வலைதள நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதில், ஒரு நபர் முட்டை போண்டா ஆம்ப்லேட் ஆன கதை என்றும் கமன்ட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நல்லதொரு படத்தை எடுத்து மத்திய அரசிடம் விருது பெறுவதன் பின்னணியில் உள்ள வலிகள் நடிகர், திரைப்பட பணியாளர்கள், இயக்குனர் என திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மாறாக விருது கொடுத்ததற்கு சம்பந்தமே இல்லாத விமர்சனத்தை முன்வைத்தால், எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தப்படலாம் என்பதற்கு தருமபுரி எம்.பி மருத்துவர் செந்தில்குமாரின் ட்விட்டர் சம்பவமே சாட்சி.!

இது குறித்த பார்த்தீபனின் முகநூல் பதிவில், ‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க) பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று sweet-ஆக ட்விட் பதிவு செய்துள்ளார். செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறதுவசவுகள்.

தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால், நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை.அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது. sorry for that) அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம். திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’ என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன்.

சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!

கடைசியாக வந்த செய்தி : சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க.....தற்சமயம் உயிர் காக்க - காக்க முக கவசம் அணிக " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Parthipan Trolled Dharmapuri MP Dr Senthilkumar due to Ottha Serupu Movie


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->