பிரபல நடிகருடன் இணையும் நாகார்ஜூனா - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகருடன் இணையும் நாகார்ஜூனா - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகும் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் நடிகர் தனுஷுடன் ராஷ்மிகா நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் நாகர்ஜூனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படம்  தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. 

இந்தப் படம் தோல்வி அடைந்தாலும் நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு இயக்குநரான சேகர் கமுலாவுடன் இணைந்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இதற்கிடையே நடிகர் நாகர்ஜூனா இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவர் தனுஷின் 51வது படத்தில் இணைகிறார் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor nagarjuna joined actor dhanush 51 movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->