பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து கார் விபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தீப் சிங் சித்து மாடலிங் உலகில் அறிமுகமாகி, 2015 நடிகராக அறிமுகமானார். சட்ட கல்லூரி முடித்துவிட்டு நடிக்கத்தொடங்கினார். பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சித்து, பாஜக எம்பி நடிகர் சன்னி தியோலுக்கு மிக நெருக்கமானவர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாபின் குர்தாஸ்பூர்  தொகுதியில் நடிகர் சன்னி தியோல் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். 

விவசாய போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்து தீவிரம் காட்டினார். இது பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பலனாக ஊர்வலத்தினரை செங்கோட்டைக்கு அழைத்து சென்றார். அதன் உச்சியில் அத்துமீறி கொடியை ஏற்றினார். இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு பிறகே ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில், நடிகர் தீப் சிங் சித்து நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார்.  டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது இந்த கார் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9.30 மணி அளவில்டெல்லியிலிருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் டிரெய்லர் டிரக்  மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சித்து உரியிழந்துள்ளார். அவருடன் பயணித்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor deep sidhu dies in accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->