நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜை நீக்கிய விஷால்.. இதுதான் காரணம்.? - Seithipunal
Seithipunal


நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விஷால், கார்த்திக், நாசர் தரப்பு மேல்முறையீடு செய்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில் 2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என்றும், அதில் பதிவான வாக்குகள் என்ன வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனையடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தல் குறித்தும், புதியதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகள் குறித்தும் உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாக நடிகர் சங்கத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பட்டது. 

அந்த நோட்டீஸில் நடிகர் சங்கம் இருவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தது. உங்களை ஏன்? நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜ் மற்றும் உதயாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பாக்யராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரும் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விதி 13-ன் படி பாக்யராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் 6 மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவதாக அறிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Bhakyaraj suspended Nadigar Sangam announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->