திருமணத்துக்கு தேதி குறித்த ஆர்யா - சாயிஷா! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், கதாநாயனாகவும் நடித்துள்ளார். தற்போது ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.

கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடைபெற்றது. இதில் பல பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். 

இந்நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறுகின்றனர். அவர்கள் இதனை இருவரும் மறுக்கவில்லை.

தற்போது ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor arya and Sayyeshaa marriage date


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->