நடிகரும், சினிமா விமர்சகருமான சத்யேந்திரா காலமானார்; உடலை வாங்குவதற்கு கூட உறவினர்கள் யாரும் வராத அவலம்..! - Seithipunal
Seithipunal


நடிகரும் சினிமா விமர்சகர்மான சத்யேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்யேந்திரா நடிகர் என்பதை விடவும் சினிமா விமர்சகராகவே பலராலும் அறியப்பட்டவர். 

குறிப்பாக புதிய திரைப்படங்களுக்கு இவர் தனது பாணியில் தெரிவிக்கும் விமர்சன கருத்துகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

அதாவது, எந்த ஒரு புதிய படம் திரைக்கு வந்தாலும் சத்யந்திராவிடம் ரிவியூ கேட்பதை பல யூடியூபர்கள் வாடிக்கையாக கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சத்யேந்திராவின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பாக நடிகை வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதள பக்கங்களில் சத்யேந்திரா குறித்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கடைசியாக அவர் கருப்பு படத்துக்கும் தனது யூடியூப் சேனலில் விமர்சனம் அளித்திருந்த நிலையில் அவரது திரை விமர்சனத்திற்காக   காத்திருக்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor and film critic Satyendra passes away


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->