புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Today gold price details
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இந்த மாதம் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 49,200க்கும் கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6,150 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 79.20 க்கும் பார் வெள்ளி ரூ. 79,200க்கும் விற்பனை ஆகிறது.