டெலிகிராம் செயலிக்கு பிரேசிலில் தடை.! - Seithipunal
Seithipunal


டெலிகிராம் செயலிக்கு பிரேசிலில் தடை.!

பிரபல சமூக வலைத்தளமான டெலிகிராம் செயலியை உலக நாடுகளில் உள்ள ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரேசில் நாட்டில் அரசுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக டெலிகிராம் செயலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த அந்நாட்டின் உச்சநீதிமன்றம், "அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் உள்ள தவறான பதிவுகளை டெலிகிராமில் இருந்து நீக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் டெலிகிராம் செயலியை பிரேசிலில் 72 மணி நேரம் முடக்கப்படும்.

அவ்வாறு முடக்கப்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டெலிகிராம் நிறுவனம் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுகு தொடர்பாக டெலிகிராமில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த பதிவில் பிரேசிலில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆகவே அங்கு போலி செய்தி மசோதா நிறைவேற்றப்பட்டால் பிரேசிலை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telegram app ban in brezil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->