இன்று வாங்கலாமா? காத்திருக்கலாமா? மீண்டும் தங்க விலை உயர்வால் குழப்பம்! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Should we buy today Or should we wait Confusion again due rise gold prices What today prices
சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் பரபரப்பாக இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் கிராமுக்கு ரூ.16,800 வரை சென்ற தங்கம், பின்னர் குறைந்தாலும், மீண்டும் ஏற்ற பாதையைத் தொடங்கியுள்ளது.
சென்னையில் முன்தினம் கிராமுக்கு ரூ.13,950 என்ற நிலையில் இருந்த தங்கம், நேற்று ஒரே நாளில் இரண்டு கட்டங்களாக உயர்வு கண்டது. காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240 ஆகவும் விற்பனையானது.

அதன்பின் மாலை நேரத்தில் மீண்டும் வேகமெடுத்து, கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.14,270 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் சென்றது. மொத்தத்தில், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்ததால் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று மேலும் அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு சென்றுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.320-க்கும், பார் வெள்ளி ரூ.3.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி 5 நாள் தங்க விலை (22 காரட் – சவரன்):
03-02-2026 – ரூ.1,14,160
02-02-2026 – ரூ.1,11,600
01-02-2026 – ரூ.1,19,200
31-01-2026 – ரூ.1,19,200
30-01-2026 – ரூ.1,26,800
கடைசி 5 நாள் வெள்ளி விலை (கிராம்):
03-02-2026 – ரூ.300
02-02-2026 – ரூ.300
01-02-2026 – ரூ.320
31-01-2026 – ரூ.320
30-01-2026 – ரூ.405
தொடர்ச்சியான விலை ஏற்றம் காரணமாக, நகை சந்தையில் வாங்குபவர்கள் காத்திருக்கும் நிலையும், விற்பனையாளர்கள் உற்சாகமான நிலையும் நிலவுகிறது.
English Summary
Should we buy today Or should we wait Confusion again due rise gold prices What today prices