நகை சந்தையில் அதிர்ச்சி: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம்...!
Shock jewelry market Gold and silver prices continue rise
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்த நிலையில், அதன் பின்னர் தங்கம் விலை ஏற்றமும் இறக்கமும் கொண்ட அலைபாயும் போக்கில் இருந்து வருகிறது.
ஆண்டு தொடங்கிய நாளிலிருந்தே தங்க சந்தையில் நிலைத்தன்மை இல்லாமல், விலை தொடர்ந்து ஊசலாடி வருகிறது.நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனையானது.

அடுத்த நாளான நேற்று காலை, எதிர்பாராத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440-ஐ எட்டியது. மாலையில் விலை குறையும் என நகை வியாபாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக மீண்டும் ரூ.640 உயர்வு ஏற்பட்டு, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையானது.
இதனால், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு பதிவாகி, தங்க சந்தை சூடுபிடித்தது. அதேபோல், கிராம் விலையும் ரூ.80 உயர்ந்து ரூ.12,760-க்கு சென்றது.இந்த சூழலில், இன்றும் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் கண்டுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனையாகிறது.
கிராம் விலை ரூ.70 உயர்ந்து ரூ.12,830-ஆக உள்ளது.வெள்ளி விலையும் பின்னடையாமல், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.271-க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2.71 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.
இன்றைய தங்கம் – வெள்ளி விலை நிலவரம் (சென்னை):
தங்கம் (22 காரட்):
ஒரு கிராம் – ரூ.12,830 (+ரூ.70)
ஒரு சவரன் – ரூ.1,02,640 (+ரூ.580)
வெள்ளி:
ஒரு கிராம் – ரூ.271 (+ரூ.5)
ஒரு கிலோ – ரூ.2.71 லட்சம் (+ரூ.5,000)
English Summary
Shock jewelry market Gold and silver prices continue rise