ஷாக்! மீண்டும் எகிறிய தங்கம் விலை...! வேதனையில் இல்லத்தரசிகள்...!
Shock Gold prices soar again Housewives in pain
தங்கம் விலை மீண்டும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இது கடந்த 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக நேற்று அதன் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது.நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.

மேலும், நேற்று ஒரே நாளில் ரூ.73,000 மற்றும் ரூ.74,000 என்ற நிலையை கடந்து இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய விலை உயர்வு அதனையும் கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும் சவரனுக்கு ரூ.200உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 பார் வெள்ளி ரூ. 1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை :
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
கடைசி 5 நாள் வெள்ளி விலை:
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
English Summary
Shock Gold prices soar again Housewives in pain