வங்கக்கடல் சுழற்சி எழுந்தது! -தென் மாவட்டங்களில் மழை தாக்கம் தீவிரம்! மீனவர்களுக்கு ரெட் அலர்ட்! -வானிலை ஆய்வு மையம்
Rain impact southern districts intense Red alert for fishermen Meteorological Research Centre
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், தமிழகத்திலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை அடுத்த ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால், மாநிலம் முழுவதும் மழை செயல்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13.11.2025) – மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
நாளை (14.11.2025) மற்றும் 15.11.2025 – ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
16.11.2025 – தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை;
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கனமழை வாய்ப்பு.
17.11.2025 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை வலுப்பெறும் என கணிப்பு.
18.11.2025 – தென்மாவட்டங்களில் (தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) கனமழை தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
19.11.2025 – மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை;
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை.
சென்னை வானிலை:
இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை – 32°–33°C
குறைந்தபட்ச வெப்பநிலை – 25°–26°C
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
13–14 நவம்பர்: தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் 35–55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.15–17 நவம்பர்: இதே பகுதிகளில் சூறாவளி காற்று தொடரும் என எச்சரிக்கை.வங்கக்கடல் பகுதிகளில் 13–14 நவம்பரில் காற்று அதிர்ச்சி நிலை எதிர்பார்ப்பு.
அரபிக்கடல்: இன்று மட்டும் (13 நவம்பர்) சூறாவளி காற்று; பிற நாட்களில் எச்சரிக்கை இல்லை.
மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Rain impact southern districts intense Red alert for fishermen Meteorological Research Centre