அப்பாடா! சற்று குறைந்த தங்கம் விலை...! எவ்வளவு குறைந்தது தெரியுமா?
price of gold has dropped a bit Do you know how much it has dropped
உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் தங்கத்தின் விலை அடிக்கடி அதிகரிப்பதும் உயர்வதுமாக இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

இதில் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400 க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
03-07-2025- ஒரு கிராம் ரூ.121
02-07-2025- ஒரு கிராம் ரூ.120
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
English Summary
price of gold has dropped a bit Do you know how much it has dropped