அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை - ஒரு கிலோ 250 க்கு விற்பனை.!! - Seithipunal
Seithipunal


அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை - ஒரு கிலோ 250 க்கு விற்பனை.!!

பருவமழையின் எதிரொலியால் வட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைவு மற்றும் உற்பத்தி பாதிப்பால் தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தக்காளி விலை ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்துது  நியாய விலை கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவெடுத்து அதன் படி விற்பனையும் நடைபெற்று வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிழும் குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஹாபூர் நகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையானது. 

அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.117 ஆக இருந்தது. தக்காளியின் இந்த திடீர் விலையேற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக டெல்லி, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ தக்காளியை ரூ.90-க்கு மத்திய அரசு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one kg tomatto ruling up 250 rupees in india


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->