இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி & ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு - அமெரிக்கா கொடுத்த தகவல்!
India Beef export
அமெரிக்க விவசாயத் துறையின் அறிக்கையின்படி, இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் 45.7 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி, 2025ல் 46.4 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி 15.6 லட்சம் டன்னிலிருந்து 16.4 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மாடுகள் மற்றும் எருமைகள் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 4.09 கோடியிலிருந்து 4.14 கோடியாக அதிகரிக்கும்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மாட்டிறைச்சி நுகர்வு 30 லட்சம் டன்னிலிருந்து 36 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற உணவுகளை விட மாட்டிறைச்சி மலிவாகக் கிடைப்பதால் நுகர்வு அதிகரிக்கும்.
இந்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் இறைச்சிக் கடைகள் அமைக்கவும், நவீனப்படுத்தவும் உதவி செய்கிறது. தேசிய கால்நடை இயக்கம் மூலம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் கால்நடை சுகாதாரம், இனப்பெருக்கம், தீவனம் வழங்குதல் போன்றவற்றை மேம்படுத்துவது இதற்க்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.