இனி 10 நொடி தான்! Google Pay, Paytm வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி! - Seithipunal
Seithipunal


யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் விரைவாக நடைபெற, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. முக்கிய UPI சேவைகளுக்கான பதிலளிப்பு நேரம் (response time) குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்த நிலையில் பணம் டெடக்ட் ஆனதா என்பதை உறுதி செய்யும் நேரம், மேலும் பணத்தை திரும்பப் பெறும் (reversal) நேரம், முந்தைய 30 நொடிகளில் இருந்து இப்போது 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், யுபிஐ ஐடியை சரிபார்க்கும் பணியும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், பயனர்கள் யுபிஐ பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்தும்போதும் பெறும்போதும் அனுபவம் மெச்சத்தக்கதாக இருக்கவே செய்யப்பட்டுள்ளன.

PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட பிரபல யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் நபர்களுக்கு இது ஒரு நேரச் சுருக்கமாக அமையும்.

வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் (PSPs) தங்கள் சேவைகளை இந்த புதிய நேரச் சீமைகளுக்கு ஏற்றவாறு தகுந்தவாறு புதுப்பிக்க NPCI வலியுறுத்தியுள்ளது. தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படாதவாறு பார்த்து செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Google Pay Paytm UPI transection time less


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->