சத்துணவில் புழு: ஏழை குழந்தையின் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன்: இது தான் திராவிட மாடலா..?
Nainar Nagendran posts shocking video of poor child claiming to have worms in his food
கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுபள்ளியில் பயிலும் குழந்தை ஒன்று தான் வாங்கிய சத்துணவில் புழு, பூச்சி இருப்பதால் அதை எடுத்துப்போட்டாலும் திரும்ப, திரும்ப வருகிறது என்று தன்னுடைய பெற்றோரிடம் சொல்லிய பிறகு அவர்கள் வந்து சம்பந்தபட்டவர்களிடம் கூறிய பிறகும் பூச்சியாக உள்ளதாக கூறும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை என்று ஏழை குழந்தை கூறும் நிலையில், இது தான் திராவிட மாடலா, என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய பாரதி பிறந்த மண்ணில், இன்று “சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை” என ஒரு ஏழை வீட்டுக் குழந்தை மழலை மொழியில் புலம்புவது மனதை உலுக்குகிறது.
ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு அவலங்களால் தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Nainar Nagendran posts shocking video of poor child claiming to have worms in his food