தங்கத்தை புறக்கணித்த இந்திய மக்கள்! உலக தங்க கவுன்சில் சொன்ன அதிர்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் தங்க தேவையில் 16 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால், நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் குறைந்தது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன் தரவுகளின்படி, கடந்தாண்டு இதே காலாண்டில் 248.3 டன் இருந்த தங்கத் தேவை, இவ்வாண்டு 209.4 டனாக குறைந்துள்ளது. இருப்பினும், தங்க விலை அதிகரித்ததால் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது.

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் சந்தையான இந்தியாவில் நகைத் தேவையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்க நகைத் தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டனிலிருந்து 117.7 டன்களாக சரிந்தது. எனினும், விலையின்மேல் தாக்கம் காரணமாக நகை விற்பனை மதிப்பு ரூ.1,14,270 கோடியில் நிலைத்திருந்தது.

மாறாக, தங்கத்தை முதலீடாக வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. தங்க முதலீட்டு தேவை 20 சதவீதம் உயர்ந்து 91.6 டன்களாகவும், அதன் மதிப்பு 74 சதவீதம் உயர்ந்து ரூ.88,970 கோடியாகவும் உயர்ந்துள்ளது. பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைப் பார்க்கும் முதலீட்டாளர்கள் இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது.

தங்க இறக்குமதி 37 சதவீதம் குறைந்து 308.2 டனிலிருந்து 194.6 டன்களாகவும், மறுசுழற்சி 7 சதவீதம் சரிந்து 21.8 டன்களாகவும் குறைந்துள்ளது. மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய தங்கத் தேவை 600 முதல் 700 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

உலகளவில் இதற்கு மாறாக, இரண்டாம் காலாண்டில் தங்கத் தேவை 1,313 டனாக உயர்ந்தது. இது இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Price india world council


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->